கால்நடைகளுக்கு மூலிகை சிகிச்சை பயிற்சி

0
151

உழைக்க நான் தயாராக இருக்கிறேன்.  ஆனால் என்ன மாதிரியான தொழில் ஆரம்பிப்பது என்பது குறித்த எந்தவொரு விஷயமும் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.  உங்களின் எண்ணங்களுக்கு மருந்தாக, உங்கள் ஊக்கத்திற்கு உரமேற்ற, சில பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பை இங்கு தொகுத்துள்ளோம்.

 

இங்கு தொகுக்கப்பட்டவைகளில்  சில ஏற்கெனவே பயிற்சி வகுப்பு முடிந்துவிட்டன.  இருந்தபோதிலும், அடுத்த பயிற்சி வகுப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்தும் இந்தப் பயிற்சி குறித்த கூடுதல் அறிவையும் நீங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

 

இப்போதெல்லாம் அல்லோபதி மருத்தவத்தில் ஏமாற்றமும் அதிக செலவும் அதிகரித்து வருவதால் பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைகள் பிரபலமாகி வருகின்றதை பார்க்கிறோம். கால்நடைகள் மற்றும் இதற்கு விலக்கா?

மதுரை திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் கால்நடை மற்றும் கோழிகளுக்கு மூலிகை சிகிச்சை பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது.

கால்நடைகளில் மூலிகை சிகிச்சை மூலம் சிறிய நோய்களை குணப்படுத்த முடியும். உதாரணமாக கால்நடைகளுக்கு ஏற்படும் மடிநோய், வயிற்று உப்புசம், கழிச்சல், அஜீரணம் போன்றவற்றிற்கு ஆங்கில மருந்துகளை பயன்படுத்தாமல் எளிதாக கிடைக்கக்கூடிய மூலிகைகளை கொண்டு குணப்படுத்தலாம். செலவும் குறையும். இப்பயிற்சியில் மூலிகை மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தக்கூடிய கால்நடை நோய்கள், மூலிகைகள் மூலம் சிகிச்சை அளித்தல், மூலிகை பண்ணைகளை நேரடியாக பார்வையிடுதல், அவர்கள் இடத்திலேயே மூலிகை பண்ணை அமைத்து கொடுத்தல் பற்றிய விவரங்கள் கற்றுத்தரப்படுகிறது.

செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொள்ளலாம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here