தக்காளியிலிருந்து உணவு பதார்த்தம் தயாரிப்பு பயிற்சி

0
97

உழைக்க நான் தயாராக இருக்கிறேன்.  ஆனால் என்ன மாதிரியான தொழில் ஆரம்பிப்பது என்பது குறித்த எந்தவொரு விஷயமும் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.  உங்களின் எண்ணங்களுக்கு மருந்தாக, உங்கள் ஊக்கத்திற்கு உரமேற்ற, சில பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பை இங்கு தொகுத்துள்ளோம்.

இங்கு தொகுக்கப்பட்டவைகளில்  சில ஏற்கெனவே பயிற்சி வகுப்பு முடிந்துவிட்டன.  இருந்தபோதிலும், அடுத்த பயிற்சி வகுப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்தும் இந்தப் பயிற்சி குறித்த கூடுதல் அறிவையும் நீங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

நாகை மாவட்டம் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தக்காளியிலிருந்து உணவு பதார்த்தங்கள் தயாரிப்பு தொழில்நுட்ப பயிற்சி அவ்வப்போது கற்றுக்கொடுக்கப்படுகிறது.

பயிற்சியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், பண்ணை மகளிர், கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர் பங்கேற்று பயன்பெறலாம்.

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் வேளாண் அறிவியல் நிலையத்தை நேரடியாகவோ அல்லது 04365246266 என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகும்போது, முன் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here