டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு சிறப்புப் பகுதி 40

0
182

பொது அறிவுப் பகுதி

தமிழ்நாட்டில் பக்தி இயக்கம்
• பல்லவர் வரலாற்றில் சமயத்துறையில் நிகழ்ந்த ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி பக்தி நெறி இயக்கம் ஆகும். களப்பிரர்கள் காலத்தில் நிலைகுலைந்து போன இந்த சமயத்தைக் கட்டிகாக்கவும், மக்களிடையே பக்தி பரவசத்தை ஊட்டவும் நாடு தழுவிய சமய இயக்கம் பக்தி நெறி இயக்கம் ஆகும். மக்களிடையே பக்தி நெறியை வளர்ப்பது இதன் குறிக்கோள் ஆகும், இவ்வியக்கத்தின் வளர்ச்சிக்காக நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஆற்றிய தொண்டு குறிப்பிடத்தக்கது. இவர்களது இடைவிடா முயற்சியால் இந்து மதம் புதுப்பொலிவு பெற்றது, இதனால் செல்வாக்குப் பெற்று இருந்த சமண, பௌத்த மதங்கள் நம்மண்ணில் இருந்து சிறப்பை இழக்கத் தொடங்கின.
• நாயன்மார்கள்: சிவபெருமானை முழு முதல் தெய்வமாக வணங்கியவர்கள் நாயன்மார்கள் எனப்பட்டனர். அக்காலத்தில் 63 நாயன்மார்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றன. அவர்களுள் திருநாவுக்கரசர். சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் மிக முக்கியமானவர்கள். அவர்கள் இந்து சமய புண்ணிய ஸ்தலங்களைத் தரிசித்து, இந்து சமயக் கருத்துக்களைக் கிராமங்களில் வாழ்ந்த சாதாரண மக்களுக்கு எடுத்து உரைத்தனர். இவர்களது முயற்சியால் தமிழ்நாட்டில் இந்து சமயம் வளர்ச்சியடைந்தது. நாயன்மார்கள் அருளிய பாடல்கள் அனைத்தும் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுக்கப்பட்டது. அந்த தொகுப்பு சைவத்திருமுறைகள் என அழைக்கப்படுகிறது. மொத்தம் 12 சைவத்திருமுறைகள் உள்ளன. அவையாவன: திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த தேவாரம் 1,2,3 திருமுறைகளாகும். திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த தேவாரம் 4,5,6 திருமுறைகளாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த தேவாரம் ஏழாம் திருமுறையாகும். மாணிக்கவாசக் அருளிச் செய்த திருவாசகம், திருக்கோவையார் எட்டாவது திருமுறையாகும், திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது பேர்கள் அருளிச் செய்த திருவிசைப்பா, ததிருப்பல்லாண்டு ஒப்பதாம் திருமுறையாகும். திருமூலதேவநாயனார் அருளிச் செய்த திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும். திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் முதலிய பன்னிருவர் அருளியவை பதினோராம் திருமுறையாகும். சேக்கிழார் சுவாமிகள் அருளிச் செய்த திருத்தொண்டர் புராணம் பன்னிரெண்டாம் திருமுறையாகும். இதில் அறுபத்து மூன்று நாயன்மார்களது வரலாறு கூறப்பட்டுள்ளது.
முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும். திருவாசகத்தைப் படித்த மேல்நாட்டு அறிஞராகிய போப்பையர் அதில் மிகவும் ஈர்க்கப்பட்டு ஆங்கிலத்தில் அதனை மொழிபெயர்த்துள்ளார். திருமுறைகளில் உள்ள சில பாடல்களைப் பொன்னம்பலம் ராமநாதன், பிலிப்ஸ் முதலியோர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர்.
• ஆழ்வார்கள் : திருமாலை முழு முதல் கடவுளாக வணங்கியவர்கள் வைணவர் எனப்பட்டனர். வைணவத்துறவிகளுக்கு ஆழ்வார்கள் என்று பெயர். ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர். அவர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. பொய்கை ஆழ்வார் 2. பூதத்தாழ்வார் 3. பேயாழ்வார் 4. மதுரகவியாழ்வார் 5. பெரியாழ்வார் 6. ஆண்டாள் 7. திருபாபாணாழ்வார் 8. திருமங்கையாழ்வார் 9. திருமழிசையாழ்வார் 10. தொண்டரடிப் பொடியாழ்வார் 11. நம்மாழ்வார் 12. குலசேகர ஆழ்வார்
பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள் ஆவார். இவர் பெரியாழ்வார் என்ற ஆழ்வாரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவை ஆட்சி செய்த மன்னன் குலசேகரனும் ஒரு ஆழ்வார் ஆவார், இவரது பாடல்கள் ஸ்ரீரங்கத்திலுள்ள இறைவனைப் புகழ்வதாக உள்ளது. கடைசி ஆழ்வாரான மதுரகவியாழ்வார், நம்மாழ்வாரின் சீடன் ஆகும். பன்னிரு ஆழ்வார்களும் பாடிய பாடல்களின் தொகுப்புக்கு நாலாயிரதிவ்விய பிரபந்தம் என்று பெயர். நாதமுனி என்பவர் இந்நூலைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். இந்நூல் முதலாயிரம், பெரிய திருமொழி, இறைப்பா, திருமொழி என நான்கு பகுதிகளைக் கொண்டது. இந்நூல் இருபத்திநான்கு நூற்களால் ஆனது. இந்நூலின் காணப்படுகின்ற பாடல்களில் அதிக பாடல்களை நம்மாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் பாடியுள்ளனர். நம்மாழ்வரின் திருமொழி சுதிராவிட வேதம்சு என்று அழைக்கப்படுகிறது.
பக்தி நெறி இயக்கம் சமுதாயத்தில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தின. பல்லவர் காலத்திலிருந்து இந்து மதம் சைவம், வைணம் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்து செயல்பட்டு வந்தது. இக்காலத்தில் வாழ்ந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும் இந்து மதக்கருத்துக்களை பாமர மக்களிடையே பரப்பி வந்தனர். குறிப்பாக இக்காலத்தில் தான் இந்து சமய கருத்துக்கள் சாதாரண மக்களைத் தேடி சென்றன. இக்காலத்தில் இறைவனைக் கூட்டாக சேர்ந்து வழிபடும் முறை தோன்றியது எனலாம்.
பக்தி நெறி இயக்கம் காண, பௌத்த மதங்களுக்கு எதிராகத் தோன்றியது ஆகும். இக்காலத்தில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோரின் முயற்சியால் இந்து சமயம் ஏற்றம் பெற, சமணமும் பௌத்தமும் இறக்கம் பெற்றன. குறிப்பாக, தென்னிந்தியாவிலிருந்து சமணம், பௌத்தம் ஆகியவை புகழ் குறைய, பக்தி இயக்கம் பெறும் பங்கு வகித்தது எனலாம்.
* நினைவிற் கொள்க
1. ஆழ்வார்கள் – 12
2. நாயன்மார்கள் மொத்தம் – 63
3. ஆழ்வார்கள் அருளிய பாடல் தொகுப்பு – நாலாயிரத்திவ்விய பிரபந்தம்
-4. நாயன்மார்கள் அருளிய பாடல் தொகுப்பு – சைவத்திருமுறைகள்
5. நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் – நாதமுனிகள்
6. சைவத்திருமுறைகளைத் தொகுத்தவர் – நம்பியாண்டார் நம்பி
தமிழ் நூல்களும் அதன் ஆசிரியர்களும்
பதிணெண் மேல் கணக்கு நூல்கள் – எட்டுத்தொகை+பத்துப்பாட்டு

எட்டுத்தொகை:
நற்றிணை – உப்பூரி குடிக்கிழார்
குறுந்தொகை – உப்பூரி குடிக்கிழார்
ஐங்குறுநூறு – கூடலூர் கிழார்
அகநானூறு – உருத்திர சன்மன்
கலித்தொகை – தெரியவில்லை
புறநானூறு – பூதப்பாண்டியன்
பதிற்றுப்பத்து – தெரியவில்லை
பரிபாடல் – கரும்பிள்ளைப் பூதனார்

பத்துப்பாட்டு:

திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
நெடுநல்வாடை – நக்கீரர்
மதுரைக்காஞ்சி – மாங்குடிமருதனார்
பொருநராற்றுப்படை – முடத்தாமக்கண்ணியார்
பெரும்பாணாற்றப்படை – உருத்திரங்கண்ணனார்
சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நத்தத்தனார்
கூத்தாற்றுப்படை (மலைபடுகடாம்) – பெருங்கௌசிகனார்
குறிஞ்சிப்பாட்டு – கபிலர்
முல்லைப்பாட்டு – நப்பூதனார்
பட்டிணப்பாலை – உருத்திரங்கண்ணனார்
பதிணெண்கீழ்க்கணக்கு நூல்கள்:
நாலடியார் – சமணமுனிவர்கள்
நாண்மணிக்கடிகை – விளம்பிநாதனார்
இன்னா நாற்பது – கபிலர்
இனியவை நாற்பது – பூதந்சேந்தனார்
திரிகடுகம் – நல்லாதனார்
ஏலாதி – கணிமேதாவியார்
முதுமொழிக்காஞ்சி – கூடலூர், கிழார்
திருக்குறள் – திருவள்ளுவர்
ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார்
பழமொழி – மூன்றுறையனார்
சிறுபஞ்சமூலம் – காரியாசன்
ஐந்திணை ஐம்பது – மாறன் பொறையனார்
ஐந்திணை எழுபது – மூவாதியார்
திணைமொழி ஐம்பது – கண்ணஞ்சேந்தனார்
திணைமாலை நூற்றைம்பது – கணிமேதாவியார்
கைந்நிலை – புல்லங்காடனார்
கார் நாற்பது – கண்ணங்கூத்தனார்
களவழி நாற்பது – பொய்கையார்

ஐம்பெருங்காப்பியங்கள்:

சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
மணிமேகலை – சீத்தலைச்சாத்தனார்
சீவகசிந்தாமணி – திருத்தக்க தேவர்
வளையாபதி – தெரியவில்லை
குண்டலகேசி – நாதகுத்தனார்

ஐஞ்சிறு காப்பியங்கள்:

உதயன குமார காவியம் – தெரியவில்லை
யசோதர காவியம் – தெரியவில்லை
நாககுமார காவியம் – தெரியவில்லை
சூளாமணி – மொழித்தேவர்
நீலகேசி – வாமன முனிவர்

இலக்கண நூல்கள்:

அகத்தியம் – அகத்தியர்
தொல்காப்பியம் – தொல்காப்பியர்
நேமிநாதம் – குணவீர பண்டிதர்
தண்டியலங்காரம் – தண்டின்
நன்னூல் – பலனந்தி முனிவர்
இலக்கணக் கொத்து – சுவாமிநாத தேசிர்
இலக்கண விளக்கம் – வைத்தியநாத தேசிகர்

இதர முக்கிய நூல்கள்:

பாரதியார்: பாஞ்சலி சபதம், குயல் பாட்டு, ஞானரதம், கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு.

பாரதிதாசன்:

பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, எதிர் பாராத முத்தம், இசையமுது, பிசிராந்தையார்.

சுரதா:
தேன்மழை, துறைமுகம்

வாணிதாசன்:
எழிலோவியம், குழந்தை இலக்கியம், தமிழச்சி, தொடுவானம்

கண்ணதாசன்:
அர்த்தமுள்ள இந்துமதம், மாங்கனி, சேரமான் காதலி, இயேசு காவியம், வனவாசம், ஆட்டனந்தி ஆதிமந்தி

நா.காமராசன்:
கருப்பு மலர்கள், கல்லறைத் தொட்டில், சகாராவை தாண்டாத ஒட்டகங்கள்

வைரமுத்து:
வைகறை மேகங்கள், கள்ளிக்காட்டு இதிகாசம், தண்ணீர் தேசம், திருத்தி எழுதிய தீர்ப்புகள், கருவாச்சி காவியம்.

அறிஞர் அண்ணாதுரை:
ஓர் இரவு, வேலைக்காரி, நீதிதேவன் மயக்கம், தசாவதாரம், ரங்கோன் ராதா, பார்வதி பி.ஏ,, கன்னிப்பெண் கைம்பெண் ஆன கதை.

மு.கருணாநிதி:
காகிதப்பூ, பராசக்தி, வெள்ளிக்கிழமை, குறளோவியம், தென்பாண்டிச் சிங்கம், நெஞ்சுக்குநீதி, ரோமாபுரி பாண்டியன், பூம்புகார், மந்திரக்குமாரி.

இராஜாஜி:
வியாசர் விருந்து, சக்கரவர்த்தி திருமணம்

மு.வரதராசனார்:
அகல்விளக்கு, கரித்துண்டு, கள்ளோ காவியமோ, பெற்ற மனம், செந்தாமரை

பம்மல் சம்பந்த முதலியார்:
மனோகரா

சங்கரதாஸ் சுவாமிகள்:
வள்ளி திருமணம், அபிமன்யு, பிரகலாதன், பவளக்கொடி

கல்கி:
சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, கள்வனின் காதலி, அலையோசை, திருடன் மகன் திருடன்
மு.மேத்தா: கண்ணீர் பூக்கள், சோழ நிலா, ஊர்வலம்
அழ.வள்ளியப்பா: சிரிக்கும் பூக்கள், நேருவும் குழந்தைகளும்
நா.பார்த்தசாரதி: குறிஞ்சி மலர், வலம்புரிச் சங்கு, துளசி மாடம், பாண்டி மாதேவி
ஜெயகாந்தன்: சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு பிடிச்சோறு, அக்னி பிரவேசம்
அகிலன்: கயல்விழி, சித்திரப்பாவை, வேங்கையின் மைந்தன், பாவை விளக்கு, இதயச்சிறையில்
சூர்யநாராயண சாஸ்திரி: ரூபாவதி, கலாவதி, மான விஜயம்
சாண்டில்யன்: கடல்புறா, கன்னி மாடம், மலைவாசல்
கவிஞர் முடியரசன்: பூங்கொடி, ஊன்றுகோல், வீர காவியம், காவேரிப் பாவை, முடியரசன் கவிதைகள்
திரு.வி.க. தமிழ்த்தென்றல், பெண்ணின் பெருமை, புதுமை வேட்டல், பொதுமை வேட்டல், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை: மலரும் மலையும், இளந்தென்றல், குழந்தைச் செல்வம், ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், பசுவும் கன்றும்.
நாமக்கல் கவிஞர் இராலிங்கம் பிள்ளை: தமிழன் இதயம், மலைக்கண்ணன், சங்கொலி, கவிதாஞ்சலி, அவனும் அவளும்
புலவர் குழந்தை: இராவண காவியம், காமஞ்சரி
பெ.சுந்தரம்பிள்ளை: மனோன்மணியம்
ஏச்.எ.கிருஷ்ணப்பிள்ளை: இரட்சண்ய யாத்திரிகம்
ராஜம் கிருஷ்ணன்: வேருக்கு நீர், குறிஞ்சித் தேன்
புதுமைபித்தன்: சாபவிமோசனம், பொன்னகரம், நினைவுப்பாதை, அன்று இரவு, வழி


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here