டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு சிறப்புப் பகுதி 38

0
160

பொதுஅறிவு சிறப்புப் பகுதி:

பண்டைத் தமிழ் மன்னர்கள்
பண்டைக்காலத்தில் தமிழ்நாடு மூன்று பிரிவுகளாக இருந்தது.
மூன்று பிரிவுகளையும் பாண்டியர், சேரர், சோழர் ஆகிய மூவேந்தர்கள் ஆண்டு வந்தனர்.
பாண்டியர்:
மூவேந்தருள் பாண்டியர் மிகவும் பழமை வாய்ந்தவர். பண்டையர் என்ற செசால்லே பாண்டியர் என ஆயிற்று. மதுரையும் அதனைச் சுற்றியுள்ள பகுதியும் பாண்டிய நாடாகத் திகழ்ந்தது. பாண்டிய மன்னருள் நெடுஞ்செழியன், கூன் பாண்டியன், விக்கிரபாண்டியன் ஆகியோர் புகழ் பெற்றவராவர். பாண்டியரின் கொடியில மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். அவர்களின் அடையாள மாலை வேப்பம் பூவால் தொடுக்கப்பட்டு அணிந்து கொள்வர். பாண்டிய மன்னர்கள் சிங்கங்கள் அமைத்து தமிழ் வளர்த்தனர். ரோம் முதலிய அயல் நாடுகளுடன் வாணிபம் நடத்தினர். பொன்னாலும் செம்பாலும் செய்யப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.
சேரர்: இன்றைய கேரள நாட்டின் பெரும்பகுதி அன்றைய சேர நாடாகத் திகழ்ந்தது. சேர நாட்டை ஆண்ட மன்னர் சேரர் ஆவர். சேர மன்னருள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், செங்குட்டுவன் ஆகியோர் புகழ் பெற்றவராவர். செங்குட்டுவன் தம்பியே சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள் ஆவார். சேர மன்னர் கொடியில் வில் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். அவர்கள் அடையாள மாலை பனம் பூவினால் தொடுக்கப்பட்டிருக்கும்.சேர மன்னருள் ஒருவர் குலசேகரர். இவர் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சேரமான் பெருமாள் நாயனார் எனும் சேர மன்னர் அறுபத்து மூன்று நாயன்மார்களுன் ஒருவர்.
சோழர்:
தமிழ்நாட்டில் தஞ்சிசாவூர் திருச்சி ஆகிய நகர்களைச் சுற்றியுள்ள பகுதி சோழ நாடாகத் திகழ்ந்தது. இப்பகுதியை ஆண்ட மன்னர் சோழர் ஆவார். சோழ மன்னருள் இராஜராஜன், இராஜாந்திரன், கு@லாத்துங்கன் ஆகியோர் புகழ் பெற்றவராவார். சோழ மன்னர் கொடியில் புலி சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும். அவர்கள் அடையாள மாலை அத்தி மலர்களால் ஆன மாலையை அணிந்து கொள்வர். கிரேக்க, ரோமானிய நாடுகளுடன் சோழர்கள் கடல்வழி வாணிபம் செய்து வந்தனர். சோழர்கள் காலத்தில் கிராம சிபைகள் சிறப்புற்கு விளங்கின.
மூவேந்தர்களும் நீதி தவறாமல் நாட்டை ஆண்டு வந்தனர். மூவேந்தர்கள் தமிழ்நாட்டை ஆண்ட காலம் பொற்காலம். தமிழ் மொழியும் தமிழ்க் கலைகளும் சிறந்து வளர்ந்தன.
சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கொடியின் சின்னம், தலைநகரம் மற்றும் துறைமுகம்
மன்னர்கள் கொடி தலைநகரம் துறைமுகம்
சேரர் வில் அம்பு, வஞ்சி முசிறி, தொண்டி
சோழர் புலி உறையூர் காவேரிபூம்பட்டினம் (புகார்)
பாண்டியர் மீன் மதுரை கொற்கை
*குறிப்பு: பிற்காலச் சோழர்களின் தலைநகர் தஞ்சிசாவூர்.
அகப்பொருள் மற்றும் புறப்பொருள்
* அகப்பொருளாவது ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தாமே தம்முள் நுகரும் இன்பத்தைப் பற்றிப் பிறர்க்கும் கூறவியலாததாய் அவர்தம் அகத்தாலேயே உணரக் கூடியதாதலின் அகம் எனப்பட்டது உள்ளத்து உணர்வால் அனுபவிக்கும் இன்பம்.
* புறப்பொருளாவது புறந்தோர்க்குக் கூறக் கூடியதாய் அமைந்த அறம், பொருள் ஆகியவை பற்றிக் கூறுவது புறம் எனப்பட்டது.
* அகப்பொருள் பற்றிய ஒழுக்கமே அகத்திணையாகும். திணை என்பதற்கு ஒழுக்கம் என்பது பொருள். குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை பெருந்திணை என அகத்திணைகள் ஏழு வகைப்படும். அவற்றுள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன அன்பின் ஐந்திணை என வழங்கப்படும்.
* அகப்பொருளுக்குரிய பொருள்கள் முதற்பொருள், கருப்பொருள்,
* முதற்பொருள் நிலமும் பொழுதும் என இருவகைப்படும். நிலம் 5 வகைப்படும்.
தீணை நிலம்
குறிஞ்சி மலையும், மலைசிசார்ந்த இடமும்
முல்லை காடும், காடு சிசார்ந்த இடமும்
மருதம் வயலும், வயல் சிசார்ந்த இடமும்
நெய்தல் கடலும், கடல் சிசார்ந்த இடமும்
பாலை வறண்ட கரமும், கரஞ்சிசார்ந்த இடமும்
* பொழுது இரு வகைப்படும். 1. பெரும்பொழுது 2. சிறுபொழுது
மாதங்களையும், நேரங்களையும் வைத்து பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது மேலும் 6 வகையாகப் பிரிக்கப்படும்.
பெரும்பொழுது என்பது ஒரு ஆண்டின் மாதங்களை வைத்து பெரிய பொழுதாக பிரிக்கப்படுவது.
1. கார்க்காலம்-ஆவணி, புரட்டாசி
2. குளிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை
3. முன்பனிக்காலம் – மார்கழி, தை
4. பின்பனிக்காலம் – மாசி, பங்குனி
5. இளவேனிற்காலம் – சித்திரை, வைகாசி
6. முதவேனிற்காலம் – ஆனி, ஆடி
* சிறுபொழுது என்பது ஒரு நாளை மணிகளின் (நேரம்) அடிப்படையில்சிறுபொழுதாக பிரிக்கப்படுவது. ஒவ்வொரு
சிறுபொழுதும் 4 மணி நேரம் கொண்டதாகும்.
1. காலை – காலை 6 மணி முதல் 10 மணி வரை
2. நண்பகல் – 10 மணி முதல் 2 மணி வரை
3. ஏற்பாடு – 2 மணி முதல் 6 மணி வரை
4. மாலை – 6 மணி முதல் 10 மணி வரை
5. யாமம் – இரவு 10 மணி முதல் 2 மணி வரை
6. வைகறை – இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை.
ஒவ்வொரு திணைக்கும், பெரும் பொழுதும் சிறுபொழுதும் பிரிக்கப்பட்டுள்ளது.
திணை பெரும்பொழுது சிறுபொழுது
குறிஞ்சி குளிர்காலம், முன்பனிக்கால் யாமம்
முல்லை கார்காலம் மாலை
மருதம் ஆறுபெரும்பொழுதுகளும் வைகறை
நெய்தல் ஆறுபெரும்பொழுதுகளும் ஏற்பாடு
பாலை இளவேனில், முதுவேனில், பின்பனிக்காலம் நண்பகல்
* கருப்பொருள் என்பது ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தெய்வம், மக்கள், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், புண், தொழில் என்பன ஆகும்.
* புறப்பொருள் என்பது அறம், பொருள், வீடு, பற்றியும் கல்வி, வீரம் கொண்ட புகழ் முதலியன பற்றியும் கூறுவது ஆகும். புறப்பொருளுக்குரிய திணைகள் மொத்தம் பன்னிரண்டு வகைப்படும்.
1. வெட்சித் திணை
பகை நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் அரசிர், முதலில் எதிரி நாட்டில் உள்ள பசுக்கூட்டங்களை கவர்ந்து வரச் செய்வான். அவ்வாறு நிரை கவரச் செல்லும் வீரர்கள் வெட்சிப் பூவைச் ‹டிச் செல்வர். இதுவே வெட்சித் திணை.
2. கரந்தைத் திணை
வெட்சி பூ அணிந்த வீரர்கள் கவர்ந்து செல்லப்படும் தம் நாட்டின் நிரைகளை மீட்கச் செல்@வார் கரந்தைப் பூவைச் ‹டிச் சென்று மீட்பர். இதுவே கரந்தைத்த திணை.
3. வஞ்சித் திணை
மண்ணாசையால் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி போருக்குச் செல்லும் அரசின் வஞ்சிப்பூவைச் ‹டிச் செல்வான். இதுவே வஞ்சித்திணை
4. காஞ்சித்திணை
ஓர் அரசின் தன் நாட்டின் மீது போரிட வந்த மற்ற அரசி@னாடு எதிர்சென்று போர் புரிதல் காஞ்சித்திணை, அப்படிச் செல்லும் வீரர்கள் காஞ்சிப் பூவைச் ‹டிச் செல்வர்.
5. நொச்சித் திணை
பகையரசினால் முற்றுகையிடப்பட்ட தம் மதிலை அரசின் உள்ளிருந்தே வெளியே இருக்கும் பகைவரோடு போர் புரிந்து அம்மதிலைக் காப்பதாகும். மதில் காக்கும் வீரர்கள் நொச்சிப் பூவைச் ‹டுவர்.
6. உழிஞைத் திணை
மாற்றரசினின் கோட்டையை நாற்புறமும் ‹ழ்ந்து, தன் படைகளுடன் அதனுள் புகுந்து கோட்டையை கைப்பற்றுதல் உழிஞைத் திணை ஆகும். அவ்வீரர் உழிஞைப் பூவைச் ‹டி
கோட்டையை முற்றுகையிடுதல் உழிஞைக் திணையாகும்.
7. தும்பைத் திணை
பகை வேந்தர்கள் தத்தம் படைகளுடன் தன்னவம் கருதாது வெற்றி ஒன்றையே கருதி ஊக்கத்தோடு போரிடல் தும்பைத் திணையாகும். இதற்கு தும்பைப் பூணும் ‹டுதல் மரபு ஆகும்.
8. வாகைத் திணை
போரிடும் வேந்தருள் வெற்றி பெறுபவன் வாகைப் பூவைச் ‹டி மகிழ்வான். அது வாகைத் திணையாகும்.
9. பாடாண் திணை
ஒரு மன்னனின் புகழ், வலிமை, கொடை, இரக்கம் முதலியவற்றைப் புகழ்தல் பாடாண் திணையாகும்.
10. பொதுவியல் திணை
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைத்கெல்லாம் பொதுவாக உள்ளனவும் அவற்றுள் கூறப்படாதனவும் ஆகிய செய்திகளைக் கூறுவது பொதுவியல் திணை ஆகும்.
11. கைக்கிளை திணை
கைக்ளிளை என்பது ஒருதலைக் காமம் ஆகும். இது அண்பாற் கூற்று. பெண்பாற் கூற்று என இருவகைப்படும்.
12. பெருந்திணை
பெருந்திணையாவது பொருந்தாக்காமம் ஆகும். இதுவும் ஆண்பாற் கூற்று. பெண்பாற் கூற்று என இருவகைப்படும்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here