ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ள உதவித்தொகை

0
106

முதுநிலை பட்டப் படிப்பை முடித்துவிட்டு முழுநேர இளநிலை அல்லது முதுநிலை ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்க தயாராய் இருக்கிறது மத்திய அரசின் ராஜீவ் காந்தி தேசிய கல்வி உதவித்தொகை அளிக்கும் திட்டம்.
பல்கலைக்கழக மானியக்குழு, 2010 – 2011ஆம் ஆண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, ராஜீவ் காந்தி தேசிய உதவித்தொகை அளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. மத்திய சமூக நிதி மற்றும் பழங்குடியினர் நல அமைச்சகம் இந்த உதவித்தொகையை ஆண்டுதோறும் அளித்து வருகிறது. கடந்த ஆண்டுவரை 1333 எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்கும். 667 எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த உதவித்தொகை 2000 எஸ்.சி மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், ஹியூமானிட்டிஸ் மற்றும் சமூக அறிவியல் படிப்பில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இந்த உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம். அறிவியல், ஹியூமானிட்டிஸ் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் இந்த உதவித்தொகையின் கீழ் இளநிலை ஆராய்ச்சிப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு படிப்புக் காலத்தில் அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.12,000 உதவித்தொகை அளிக்கப்படும். இதே படிப்பில் முதுநிலை ஆராய்ச்சிப் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.14,000 உதவித்தொகை அளிக்கப்படும்.
அதேபோல, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடத்தின் கீழ் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு படிப்பு மேற்கொள்ளும் இரண்டாண்டு காலத்திற்கு மாதம் ரூ.14,000 உதவித்தொகை அளிக்கப்படும். அதுவே முதுநிலை ஆராய்ச்சிப் பிரிவு மாணவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இந்த உதவித்தொகைப் பெற விரும்பும் மாணவர்கள் முதுநிலைப் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். அத்துடன் எம்.ஃபில் அல்லது பி.எச்டி. படிப்பு மேற்கொள்ள பதிவு செய்திருக்க வேண்டும்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here