அப்பளம்

0
402

கல்யாண வீடோ? காது குத்து வீடோ? எந்த வகையான வீட்டு விசேசமாக இருந்தாலும் பந்தி என்ற உணவு பரிமாற்றம்தான் நம் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு.அது பண்டைய காலம்முதல் இன்றைய நவீன காலம் வரை தொடர்ந்து கொண்டே தான் வருகிறது.வேண்டுமானால் உணவு முறைகளிலும் அது பரிமாறப்படும் விதங்களிலும் ஏதேனும் மாற்றங்கள் வந்து இருக்கலாம்.ஆனாலும் எந்த வகை பந்தி பரிமாற்றத்திலும் தவறாது இடம் பிடிப்பது அப்பளம்.

அப்பளங்களில் பல வகைகள் உள்ளன.  தமிழ்நாடு மட்டுமில்லாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி சுவைகளில் அப்பள வகைகள் உண்டு.  இந்திய அளவில் இல்லாது உலக அளவில் கூட இந்த அப்பளங்களுக்கு மவுசு உண்டு.  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிசுவைக்க கூடியது இந்த அப்பளம்.

அப்பளங்களில் மட்டும் 600 க்கும் அதிகமான அப்பள வகைகள் உள்ளன.மேலே குறிப்பிட்டது போல அப்பளத்தை தமிழ்நாடு என்ற வட்டத்திற்குள் நாம் சுருக்கி விட முடியாது.இது மாநில வாரியான சுவையை கொண்டு வேறுபட்டு நிற்கிறது.  ஒவ்வொரு மாநில அப்பள வகைகளும் அது தயாரிக்கும் விதம், அதன் முதன்மைப்பொருள் என பல வேறுபாடுகளைக்கொண்டு பல சுவைகளில் பல வகைகளில் கிடைக்கின்றன்.இந்திய குடும்பங்களில் எந்த வகையான விசேசங்களாக இருந்தாலும்  அப்பளம் தவறாது உடம் பிடிக்கும்.இது இந்தியர்களுக்கே உரித்தான உணவு முறைகளில் ஒன்று.  விசேசங்கள் மட்டுமின்றி சிறிய உணவகங்கள் முதல் பெரிய உணவகங்கள் வரை,கல்லூரி பள்ளி விடுதிகள் என எங்கு பார்ப்பினும் அப்பளத்தின் பங்கு முக்கியமானது.

எல்லா காலங்களிலும் எல்லா மக்களாலும் விரும்பி சுவைக்கப்படும் அப்பளத்தை நாம் வீட்டில் இருந்தபடியே கைத்தொழிலாகவே செய்யலாம், வீட்டுப்பெண்கள் கூட இதனை கைத்தொழிலாக செய்து வருவாய் ஈட்டலாம்.எளிய முறையில் ஒரு வகை அப்பளம் தயாரிக்கும் முறையை காணலாம்.  அப்பளம் தயாரிப்பிற்கு எளிதில் பக்கத்து கடைகளில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தான் மூலப்பொருட்கள்.

தேவையான பொருட்கள்:.

உளுத்தம் பருப்பு -2 கிலோ

எண்ணெய்       -100 மிலி

சீரகம்           -10 கிராம்

பெருங்காயம்    – சிறு துண்டு

உப்பு சோடா    -சிறிதளவு

 

செய்முறை:

உளுத்தம் பருப்பை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அப்பளங்களின் மூலப்பொருட்களில் உளுத்தம் பருப்பு தான் முதன்மையானது.என்வே அதன் சுத்தம் மிகவும் முக்கியமானது.சுத்தம் செய்யப்பட்ட உளுத்தம் பருப்பை மாவாக அரைத்து கொள்ள வேண்டும்.பிறகு அந்த மாவை சலித்துக்கொள்ள வேண்டும்.சலித்த மாவுடன் தேவையான அளவு சீரகத்தையும் ,உப்பு சோடாவையும் சேர்த்து ,தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.தண்ணீரை தேவையான அளவு விட வேண்டும்.மாவானது கெட்டியாக இருக்கும் அளவை பார்த்து தண்ணீர் விட்டு பிசைய வேண்டும்.

வாசனைக்காகவும் அதன் தரத்திற்காகவும் பெருங்காயம் சேர்க்கப்பட வேண்டும். தேவையான அளவு பெருங்காயத்தை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து பிசைந்த மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும்.பிசைந்த மாவின் மீது எண்ணெயை நன்றாக தடவி உருண்டையாய் எடுத்துக்கொள்ள வேண்டும்.உருண்டைகளை கல்லுரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும்.அப்பொழுது தான் மாவானது ரப்பர் பதத்திற்கு வந்து விடும்.ரப்பர் பதத்திற்கு வந்த மாவுதான் அப்பளத்திற்கு ஏற்ற வகையில் இருக்கும்.தேவையான அளவு புள்ளிகள் கொண்ட அச்சுப்பலகையின் மீது வட்டமாகவோ அல்லது நீண்ட வடிவிலோ அவைகளை திரட்ட வேண்டும்.வெயில் படாதவாறு ,நிழலில் தான் உலர்த்த வேண்டும்.நன்றாக உலர்ந்த பிறகு நம் கற்பனைக்கு ஏற்ற வகையில் பேக்கிங்க் செய்து வியாபாரத்திற்கு அனுப்பலாம்.

நாம் சீரகத்தை சேர்த்து செய்வதால் இது சீரக அப்பள வகையை சேர்ந்தது,சீரகத்திற்கு பதில் மிளகு சேர்த்தும் மிளகு அப்பளம் செய்யலாம்.நம் உற்பத்திக்கு ஏற்றார் போல வியாபரத்தை செய்யலாம்.குறைந்த அளவு உற்பத்தி என்றால் பக்கத்து வீடுகள்,குடியிருப்பு பகுதிகளில் நாமே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

கொஞ்சம் பெரிய அளவில் உற்பத்தி இருக்குமானால் அருகில் உள்ள சூப்பர் மார்கெட் கடைகள், ஹோட்டல்கள், பள்ளி கல்லூரி விடுதிகள் என எங்கும் வியாபத்தை பெருக்கலாம்.  உற்பத்தி அதிகமாகும் சமயத்தில் மிக்சிங் மெசின், சிலிண்டர் ரோலர் மெசின் போன்ற சில அடிப்படை இயந்திரங்களை வாங்கிக்கொள்ளலாம்.  இது நமது உற்பத்தி வேகத்தை அதிகரிக்கும்.  இந்த இயந்திரங்களை வங்கியின் கடன் மூலமாகவும் பெறலாம்.இதனை பெற அந்தந்த மாவட்ட தொழில் மையத்தையும் .அல்லது சிறு தொழில் வளர்ச்சி மையத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here