வெளிநாட்டில் படிக்க மஹேந்திரா ஸ்காலர்ஷிப்

0
95

வெளிநாட்டில் சென்று முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? ஆனால், படிக்க வைக்கும் அளவிற்கு வீட்டில் வசதி வாய்ப்புகள் இல்லையா? ஆனால், பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவரா? அப்படியானால், வெளிநாட்டில் படிக்கும் ஆசையை நிறைவேற்றுகிறது கே.சி.மஹேந்திரா அரக்கட்டளை.
அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த உதவித்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் முதல் மூன்று பேருக்கு அதிகபட்ச உதவித்தொகையாக, தலா ரூ. 8 லட்சம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச உதவித்தொகையாக மூன்று மாணவர்களுக்கு தலா ரூ. 5லட்சத்தையும் வழங்குகிறது மும்பையை தலைமையிடமாகக் கொண்டு, செயல்பட்டு வரும் கே.சி. மஹேந்திரா அறக்கட்டளை. பொறியியல், நேச்சுரல் சயின்சஸ், மெடிசின் மேனேஜ்மென்ட், பிசினஸ் மேனேஜ்மெண்ட், ஸ்டடி ஆஃப் மிலிட்டரி, ஸ்டடி ஆஃப் நேவல், ஸ்டடி ஆஃப் அவியேசன் சயின்சஸ் போன்ற ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப் படிப்போ அல்லது டிப்ளமோ படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவர்கள், இந்த உதவிக்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்பும்போது, மாணவர்கள் வெளிநாட்டில் எந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கவிருக்கிறார்களோ , அந்தப் பல்கலைக்கழகத்தின் சேர்க்கை கடிதம் அல்லது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பில் சேருவதற்கான ஏதேனும் சான்றுகள் இருப்பின், அதையும் இணைத்து அனுப்ப ÷ வண்டும். பட்டப் படிப்பு இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ படித்தவர்களும் இந்த உதவித்தொகைப் பெற தகுதியானவர்கள்தான். இந்த உதவித்தொகைப்பெற தேர்ந்தெடுக்கப்படும் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் மே மாத இறுதி வாக்கில் நேர்முகத் தேர்வுக்கான தகவல் தெரிவிக்கப்படும். இறுதிக்கட்ட நேர்முகத் தேர்வு ஜூலை மாத இறுதியில் நடைபெறும்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here