தென்னை மரம் ஏறுதல் கருவி மூலம் பயிற்சி

0
166

உழைக்க நான் தயாராக இருக்கிறேன்.  ஆனால் என்ன மாதிரியான தொழில் ஆரம்பிப்பது என்பது குறித்த எந்தவொரு விஷயமும் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.  உங்களின் எண்ணங்களுக்கு மருந்தாக, உங்கள் ஊக்கத்திற்கு உரமேற்ற, சில பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பை இங்கு தொகுத்துள்ளோம்.

 

இங்கு தொகுக்கப்பட்டவைகளில்  சில ஏற்கெனவே பயிற்சி வகுப்பு முடிந்துவிட்டன.  இருந்தபோதிலும், அடுத்த பயிற்சி வகுப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்தும் இந்தப் பயிற்சி குறித்த கூடுதல் அறிவையும் நீங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

தென்னம் மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பவர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர். பல வீடுகளில் தென்னை மரங்களில் நிறைய தேங்காய்கள் இருந்தாலும் பறிக்க ஆள் இல்லாமல் இருப்பது இப்போது  நாம் எல்லாரும் பார்க்கும் நிலைமை… இதை போக்கி மரம் ஏற பயிற்சி கொடுத்து வேலை வாய்ப்பை அதிகரிக்கும் ஒரு செய்தி இதோ..

கிராமபுற இளைஞர்களுக்கு, தென்னை மரத்தில், கருவி மூலம் ஏறுதல் குறித்து, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

சென்னை தென்னை வளர்ச்சி வாரியத்துடன் இணைந்து, டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மையம் சார்பில், தென்னை மரம் கருவி மூலம் ஏறுதல் குறித்து, ஆறு நாட்கள் பயிற்சி அளிக்கப்பகிறது.

இப்பயிற்சி, எலுமிச்சகிரியில் உள்ள அறிவியல் மையத்தில் நடத்தப்படுகிறது.

பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு, தங்கும் வசதி மற்றும் உணவு வழங்கப்பட்டு, பயிற்சி முடிவில் சான்றிதழும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், விபத்து காப்பீடு மற்றும் தென்னை மரம் ஏறும் ஒரு கருவியும், இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள குறைந்தபட்சம், எட்டாம் வகுப்பும், 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதியும், விருப்பமும் உள்ள கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள், இதுகுறித்த கூடுதல் விவரங்களை போன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.  அத்துடன் அடுத்த பயிற்சி வகுப்பு குறித்த விவரங்களையும் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.தொடர்பு எண்கள்: 04343296039, 09443796968


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here