சட்டப் படிப்பில் கொட்டிக் கிடக்கிறது வேலைவாய்ப்பு!

0
566

நீதிமன்றத்திற்கு வழக்காடும் பணியைத் தவிர பல்வேறு வேலைவாய்ப்புகள் சட்டப்படிப்பில் காத்துக் கிடக்கிறது.
உலகமயமாதலால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. அதனால், ஐ.டி. , பொறியியல், மருத்துவத் துறை சார்ந்த படிப்புகளில் மாணவர்களின் கவனம் அதிகரித்துள்ளது. படித்து முடித்தவுடன் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் கை நிறைய சம்பளத்துடன் பணிவாய்ப்பு இவைகøள்தான் மாணவர்களை பொறியியல் பக்கமும் மருத்துவத் துறைப் பக்கமும் மாணவர்களை ஈர்க்கிறது. அப்படியானால், சட்டப் படிப்பு படித்த மாணவர்களுக்கு பணிவாய்ப்புகள் குறைவுதானா? அவர்களும் பொறியியல், மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களைப் போல ஊதியம் பெற முடியாதா? சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வருங்காலத்தில் வேலைவாய்ப்பு எப்படி?என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
சட்டப் படிப்பு என்றவுடனேயே படித்துமுடித்துவிட்டு கருப்பு நிற அங்கியை மாட்டிக்கொண்டு, வழக்கு கட்டுகளை தூக்கிக்கொண்டு, நீதிமன்றத்துக்கு செல்வது மட்டும்தான் சட்டப் படிப்பிற்கான மதிப்பு என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது முற்றிலும் தவறு. சட்டப் படிப்பை பொறுத்தவரை தொழில்நுட்பத் துறை அளவிற்கு வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது.சொல்லப்போனால், நீதிமன்றத்திற்கே போகாமல், ஐ.டி., பொறியியல், மருத்துவ மாணவர்களை விட அதிகளவில் சம்பாதிக்கும் துறையாக சட்டத் துறை மாறிவருகிறது. வேலைவாய்ப்பு இருக்கும் அளவிற்கு, இந்தத் துறையில் திறமையான மாணவர்கள் இல்லை என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.சட்டப் படிப்பு படித்து பார்க்க வேண்டிய வேலைகளை, சரியான கல்வித் தகுதியில் மாணவர்கள் கிடைக்காததால், பொறியியல் படித்த மாணவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிக்கவும், வழக்கு குறித்த குறிப்புகள் மற்றும் ஒரு குற்றத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட நீதிகள் குறித்த குறிப்புரைகள், புள்ளிவிவரங்களை தயாரித்துக்கொடுக்க, அவர்கள் இந்தியா போன்ற நாடுகளை நாடுகின்றன. இம்மாதிரியான பணி வாய்ப்புகள் ஆன்லைனிலேயே கொட்டிக்கிடக்கிறது. அதை சரியாக தேடி வீட்டில் இருந்துகொண்டே பெருமளவில் பணம் சம்பாதிக்க முடியும். அதேபோல, பீபிஓ, கால் சென்டர்களிலும் சட்டம் சம்பந்தமான வேலைவாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பிற்கு தேவையான அடிப்படை தகுதிகள் என்ன? என்பதை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் மாணவர்கள் தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும்.
விமான நிலையங்கள், துறைமுகங்களில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் வரிவிதிப்பு மற்றும் வரிவிலக்கு போன்ற விஷயங்களில் வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியமானது இந்தத் பணிகளில் சேர வரிவிதிப்பு குறித்த விஷயங்கள் சுங்கவரி, கலால் வரி குறித்த என்னென்ன சட்டங்கள் இருக்கிறது. முந்தைய வழக்குகள், சர்வதேச அளவில் வரி சம்பந்தமான போன்ற விவரங்களை அறிந்து கொண்டிருக்கும் மாணவர்கள் இந்தத் துறையில் கால் பதிப்பது மிக எளிது. பன்னாட்டு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களிலும் இதேபோல வரிவிதிப்புகள் சட்டதிட்டங்கள் வழக்கத்தில் இருப்பதினால், இந்தத் துறையில் தனித்துவம் வாய்ந்த நபர்கள் வெளிநாடுகளிலும் மாத ஊதியமே லட்சக்கணக்கில் வாங்கும் அளவில், எளிதில் வேலைவாய்ப்பை பெற முடியும்.
அதேபோல, பெரிய ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்களில் ஊழியர்களின் ஊதிய விகிதம் மற்றும் வேலை சார்ந்த விஷயங்களை சட்டப்படி கவனித்துக்கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களே வழக்கறிஞர்களை பணிக்கு அமர்த்திக் கொள்கின்றன. பாதுகாப்புத் துறையிலும் சட்டப் படிப்பு படித்த மாணவர்களின் தேவை அதிகளவில் இருக்கிறது. ராணுவம், கப்பற்படை, விமானப்படைகளில் ஜேக் பிரான்ச் என்றொரு பிரிவு செயல்படுகிறது. இந்த ஜேக் பிரான்ஜ்சின் முக்கியப் பணி, ஒழுங்கீனங்கள் மற்றும் படைவீரர்களின் சட்ட சம்பந்தமான பிரச்சினைகளை நீக்குவதே இந்தப் பிரிவின் பணி. இந்தப் பணியில் சேருவதற்கு சட்டப் படிப்பில் இளநிலை பட்டம் பெற்றிருந்தாலே போதும். இதில் பல ஆண்டுகள் அனுபவமிக்க வழக்கறிஞர்கள், கமிஷன் அதிகாரியாக பணியமர்த்தப்படுகிறார்கள்.
இதுதவிர தற்போது பெரு நகரங்களில் பல்வேறு பெயர்களில் சட்ட நிறுவனங்கள் (ஃச்தீ ஞூடிணூட்ண்) செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் பணிபுரிய சட்டப் படிப்பு படித்த அனுபவம் வாய்ந்த மற்றும் புதிதாக இத்துறையில் காலஐ எடுத்துவைக்கும் சட்டத் துறை மாணவர்களும் இந்த நிறுவனங்களில் வேலைக்குச் சேரலாம்.
பொறியியல் படிப்பைப் போலவே சட்டப் படிப்பு படிக்கவும் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உதவித்தொகை காத்திருக்கிறது. குறிப்பிட்டத் துறையில் மட்டும் அந்தத் துறை சார்ந்த சட்டங்களை தெரிந்துகொள்ள, குறுகியகால சான்றிதழ் படிப்பு தற்போது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிசினஸ் லா, என்வயரான்மெண்ட் லா, இன்பர்மேஷன் டெக்னாலஜி லா, இன்டலக்சுவல் பிராப்பர்ட்டி லா, லேபர் லா, மனித உரிமை சார்ந்த சட்டம் குறித்த படிப்புகள் ஓராண்டு டிப்ளமோ படிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்படிப்பை மாலை நேர படிப்பாகவும், தொலைதூர படிப்பாகவும் மாணவர்கள் படிக்கலாம். இந்த ஓராண்டு படிப்பில் சேர மாணவர்கள் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்திருந்தால் போதும். இதே படிப்புகளை பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு சான்றிதழ் படிப்பாக படிக்க முடியும். இந்தப் படிப்புக்கான காலம் வெறும் 6 மாதம்தான்.
பட்டப் படிப்போடு ,பல்வேறு துறைகளில் சட்ட வல்லுநர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, துறைக்குத் தகுந்தாற்போல் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் சட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஒவ்வொரு மாணவருக்கும் சட்டப் படிப்பு வேலைவாய்ப்பை அள்ளித் தரும் அட்சயப் பாத்திரம்தான்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here