ரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்!

0
2274

நிறுவனத்தின் பெயர் : பாரத் ஜாப்ஸ் இணைய இதழ்
காலியிடங்களின் எண்ணிக்கை : 100
பதவியின் பெயர் : அட்மிஷன் ஆஃபீசர்
ஊதியம் : ரூ.35,000 – 40,000
பணியிடம் : ஒவ்வொரு மாவட்டத்திலும்.
கல்வித்தகுதி : பிளஸ் டூ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, முது நிலைப் பட்டப் படிப்பு.
வயது வரம்பு : 22 – 35 வயது வரை.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் : இரு பாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம்.

இது என்ன மாதிரியான பணி : சென்னையில் இயங்கிவரும் புகழ்பெற்ற யுவபாரத் ஃபயர் அண்ட் சேஃப்ட்டி கல்வி நிலையத்தில் மாணவர் சேர்க்கையை ஏற்படுத்தித் தரும் அட்மிஷன் ஆஃபீசர் பணியிடத்திற்கான அறிவிப்புதான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சேரும் ஒருவர், அந்தந்த மாவட்டங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ படித்தவர்கள், டிப்ளமோ படித்தவர்கள், பட்டப் படிப்பு படித்தவர்களை ஃபயர் அண்ட் சேஃப்ட்டி கல்வி நிலையத்தில் ஓராண்டு டிப்ளமோ படிப்பில் சேர்க்கையை ஏற்படுத்தித் தருவதே அட்மிஷன் ஆஃபீசரின் பணியாக இருக்கும்.

இந்தக் கல்வி நிலையத்தின் சிறப்பு என்ன? : தற்போது வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. இத்தகைய நேரத்தில் படித்து முடித்தவுடன் ரூ.12,000 – 35,000 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் கல்வி நிலையங்கள் இப்போது குறைந்துவிட்டன. ஆனால், இந்தக் கல்வி நிலையத்தில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள், படித்து முடித்தவுடன் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்கள், பவர் பிளாண்ட் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது இந்தக் கல்வி நிலையம்.

பணி எப்படியிருக்கும் ? : அட்மிஷன் ஆஃபீசர் பணியிடங்களை பொறுத்தவரையில் மாவட்டத்திற்கு 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். மார்க்கெட்டிங் மற்றும் கல்வி நிறுவன சேர்க்கைப் பணியில் பணிபுரிந்தவர்களுக்கு பணிவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் அந்தந்த மாவட்டங்களில் மாணவர் சேர்க்கையை ஏற்படுத்தித் தர வேண்டும். ஒரு அட்மிஷன் ஆஃபீசர் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு 4 அட்மிஷன்களை உறுதி செய்ய வேண்டியது கட்டாயம். ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதி அவரவர் வங்கிக் கணக்கில் ஊதியம் பட்டுவாடா செய்யப்படும்.

அட்மிஷன் சேர்க்கை விவரங்கள் : ஃபயர் அண்ட் சேஃப்ட்டி படிப்பை பொறுத்தவரையில் மூன்று கட்டங்களாக அட்மிஷன் நடைபெறும். தற்போது ஜூலை மாதம் வகுப்பு தொடங்குவதற்கான அட்மிஷன் சேர்க்கையே நடைபெறுகிறது. தற்போது அட்மிஷன் பெறும் மாணவர்கள், ஜூலை மாத வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ஓராண்டு டிப்ளமோ படிப்பிற்கான கட்டணம் ரூ.45,000.

பணியமர்வு எப்படி நடைபெறும் ? : முதல் கட்டமாக விண்ணப்பதாரர்களின் பயோ டேட்டா முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, தொலைபேசியில் நேர்முகத்தேர்வு நடைபெறும். அதில் நிறுவனம் திருப்தியடையும் பட்சத்தில் அவர்களுக்கு, நிபந்தனை படிவமும், பணி ஆணையும் வழங்கப்பட்டு, உடனடியாக பணியை தொடங்குவதற்கான அனுமதியும் அளிக்கப்படும். அதோடு முதல் மாதத்திற்கான விண்ணப்பங்கள், விளக்கக் கையேடும் விண்ணப்பதாரர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பயோ டேட்டாவை அனுப்ப வேண்டிய மெயில் ஐ.டி. : admissionofficer1111@gmail.com
பணி குறித்த மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள : 6380017652

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here