ஜே.என். டாடா அறக்கட்டளை உதவித்தொகை

0
68

ஒவ்வொரு ஆண்டும், வெளிநாட்டுக்குச் சென்று முதுநிலைப் பட்டப் படிப்பு அல்லது ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்து வருகிறது, ஜே.என்.டாடா அறக்கட்டளை. அதேபோல் இந்த ஆண்டு வெளிநாட்டிற்கு சென்று ஏதேனும் ஒரு பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்போ அல்லது ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள் இந்த உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித்தொகைப் பெற விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். ஜே.என்.டாடா அறக்கட்டளை. முதுநிலைப்பட்டப் படிப்பு அல்லது ஆராய்ச்சிப் படிப்பு உதவித்தொகையின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் 100 மாணவர்களுக்கு, 60 ஆயிரம் ரூபாயிலிருந்து, 4 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் மாணவர்கள் விண்ணப்பத்தோடு பட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் ஜிஆர்இ, ஜிமேட் அல்லது டோஃபல் தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழையும் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here