ஜெர்மனியில் படிக்க உதவித்தொகை

0
56

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற தனியார்துறை நிறுவனமான சீமென்ஸ், இந்தியாவில் பட்டப் படிப்பு முடித்துவிட்டு ஜெர்மனியில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது சீமன்ஸ் நிறுவனம். இந்த உதவித்தொகை மாணவர்கள் மூன்று ஆண்டுகள் ஜெர்மனியில் தங்கியிந்து படிக்கும் காலத்தில் ஏற்படும் செலவினங்களுக்கு உதவியாக இருக்கும். அதன்பஐ, விமானச்செலவு, ஜெர்மனியில் தங்கி படிக்கும் செலவு, மருத்துவச் செலவுகளையும் சீமன்ஸ் நிறுவனம் மாணவர்களுக்கு வழங்குகிறது. இந்த உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள், விண்ணப்பத்துடன் பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ், முன்பு படித்த கல்லூரியில் இருந்து பெறப்பட்ட இரண்டு பரிந்துரை கடிதங்களை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் டோஃபல் தேர்வில் குறைந்தபட்சம் (பேப்பர் வழி தேர்வு) 550 மதிப்பெண்கள் அல்லது ஆன்லைன் மூலம் தேர்வெழுதியிருப்பின் குறைந்தபட்சம் 80 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வில் குறைந்தபட்சம் 5.5 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here