கால்மிதி:

0
303

விலைவாசி ஏற்றம் விண்ணைப்பிளந்து கொண்டு செல்கிறது.  கிராமங்களில் கூட அன்றாட வாழக்கையை ஓட்டுவது என்பது சற்று கடினமாகத்தான் இருக்கிறது,அப்படியானால் நகர வாழ்க்கை ? நடுத்தர வர்க்கத்தினர் பட்ஜெட் என்ற கணக்கை கையில் கொண்டே தின்ந்தோறும் வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.அந்த பட்ஜெட்டில் ஏதாவது ஒன்று அதிகமானாலும் மாதக்கடைசியில் பிச்சல் பிடுங்கல் தான்.  நகர வாழ்க்கையை பொறுத்த வரை குடும்ப தலைவன் மட்டுமின்றி குடும்ப தலைவியும் வேலைக்கு சென்றால் தான் அந்த மாதம் சுமூகமாக ஒடும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது, போகலாம் ! ஆனால் என்னிடம் பட்டப்படிப்பு இல்லை, என்னால் வீட்டை விட்டு வெளியே வேலைக்கு செல்ல முடியாது என குடும்ப தலைவிகளிடம் ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.

குடும்ப தலைவியும் சம்பாதிக்க வேண்டும் என்பதே இலக்கு,  வேலைக்கு செல்ல வேண்டுமென்பது இல்லை.  என்னய்யா குழப்புறீங்க!! என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.  ஆமாம் வேலைக்கு செல்ல வேண்டாம் உங்கள் வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கும் வழிகளை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.  இதற்கு தேவை ஆர்வமும் உழைப்பும் தான்.  கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடு எந்த வகையான வீடாக இருந்தாலும் வீட்டு வாசலில் கால்மிதிகள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.

கால்மிதிகளில் என்னற்ற  வகைகள் உள்ளன, 15 ரூபாயிலிருந்து ஆயிரக்கணக்கிலும் கால்மிதிகள் உள்ளன, அதன் தரத்தை பொறுத்தும் வேலைபாடுகளை பொறுத்தும் தான் அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படும் கால்மிதிகள் சாதாரண வகையை சார்ந்த்தே.இந்த வகை கால்மிதிகள் யாவும் குடிசைத்தொழில்கலை போலவே செய்யப்படுகின்றன.ஏனென்றால் இவற்றை உருவாக்க தொழிற்சாலையும் கனரக எந்திரங்கலும் தேவை இல்லை.ஊசியும் நூலுமாக துணிகளை கொண்டு வீட்டில் சீரியல் பார்த்துக்கொண்டே செய்து விடலாம்.ஆனால் பாதுகாப்பாக செய்தால் சரிதான்.நகர குடும்ப பெண்கள் பகல் நேரங்களில் பொழுதுபோக்காக கொண்டும் இதனை செய்யலாம் ,நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்து செய்யுங்கள் ஆனால் இதனால் வருமானம் வரும் என்பது மட்டும் நிச்சயம்..

தேவையற்ற துணிகள், பக்கத்து டெய்லர் கடையில் உள்ள வெட்டப்பட்ட மீதித்துணிகள், நம் வீட்டில் உள்ள பழைய துணி வகைகள் என எந்த வகை துணியும் கால்மிதிக்கு பொருந்தும்.  காட்டன் வகை துணிகள் என்றால் மிக்க்கச்சிதமாக இருக்கும்.வாசலில் போடுவதற்கு காட்டன் துணி வகைகளால் செய்யப்பட்ட கால்மிதிகளே பொருந்தும்.  அந்த துணி வகைகளை திரித்து நீண்ட கய்று போல ஆக்கிக்கொள்ள வேண்டும்.  அதற்கு அவற்றை உல்லன் ஆடை போல நெய்தல் வேண்டும். ஸ்வெட்டர் பின்னவது போல பின்னி பின்னி தயார் செய்ய வேண்டும். ஸ்வெட்டர் பின்னத்தெரிந்தவர்களுக்கு மிக எளிதாக இருக்கும். அதனுடைய வடிவங்களும் கலை நுணுக்கங்களும் நமது கற்பனைத்திறனை பொருத்தது ஆகும்.

ஒரு நாளைக்கு இரண்டு முதல் நாங்கு கால்மிதிகள் வரை செய்தால் ஒரு நளைக்கு 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.  இதற்கு தேவையான் பொருட்கள் என்றால் கத்தரிக்கோல், ஸ்வெட்டர் பின்னும் ஊசி,நல்ல நிலையில் உள்ள நூல் ஆகியவ்வை இருந்தால் போதுமானது.நல்ல நூலைக்கொண்டு கால்மிதி மட்டுமில்லாமல் வீட்டின் பல தேவைகளுக்கும் கவர் வகைகள்,விரிப்பு போன்றவை செய்யலாம்.  வீட்டு தொலைபேசிக்கு தேவையான் அழகு விரிப்பு,பூங்கொத்துக்கு தேவையான விரிப்புகள்,அலங்கார விளக்குக்கான விரிப்புகள் போன்ற பல தேவைகளை நாம்செய்யலாம்.அது மட்டுமின்றி சோபா செட்டுகளுக்க்கான கவர்கல்,டிவி,கணினி போன்றவைக்கான கவர்கள் ஆகியவற்றை செய்யலாம்.வேண்டுமானால் இந்த மாதிரியான விரிப்புகளிலும் கவர்களிலும் கற்கள் கொண்ட வேலைப்பாடுகள் ,எம்ராய்டிங் வேலைப்பாடுகள்,மணிகள் வேலைப்பாடுகள் கொண்ட கலை நுணுக்கங்களை செய்தால் எளிதில் வாடிக்கையாளரகளை கவரும் விதத்திலும் விற்பனை யுக்திக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வீட்டில் நாங்கள் செய்யும் கால்மிதிகளை விற்பனை செய்ய யாரை அணுக வேண்டும்?  எந்த வித்த்தில் விற்பனை செய்ய முடியும் போன்ற குழப்பங்கள் வரலாம்.  இதற்கெல்லாம் பெரிய விற்பனை பிரதிநிதியெல்லாம் தேவை இல்லை. உங்கள் வீட்டு அருகில் உள்ள சூப்பர் மார்கெட் போன்ற கடைகளில் சரியான லாப வீத்த்தில் கால்மிதிகளை கொடுக்கலாம்.அருகில் உள்ள வீடுகலுக்கு சென்று வியாபார்த்தை செய்யலாம்.அருகில் உள்ள சிறிய அளவிலான வணிக நிறுவன்ங்களுடன் கைகோர்த்து எந்த நிறுவன பெயர்கலை நூலால் எம்ராய்டிங் வேலைகள் செய்து வியாபாரம் செய்பவர்களும் உண்டு.இந்த பின்னல் வேலைகள் மிக எளிதானவை.இதன் பின்னல் தெரியாதவர்கள் அருகில் தெரிந்தவர்களீடமும் அல்லது இணையத்தின் வழியாகவோ அதனை கற்றுக்கொள்ளலாம்.இதற்கெல்லாம் தேவை ஆர்வம் மட்டுமே.வீட்டில் ஒரு பொழுதுபோக்காக செய்தாலும் மாத்த்திற்கு குறைந்தது பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கும் ஒரு தொழிலாகும்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here