ஆர்வப்பட்டு அவஸ்தைப்படாதீர்கள்!

0
102

நண்பர் ஒருவர் சமீபத்தில் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கிறார். மாதம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறார். எம்.டெக். வரை படித்திருக்கும் அந்த நண்பர் தற்போது தன் மகளை எல்.கே.ஜி. சேர்த்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 65 ரூபாய் கட்டணம். அருமையான பள்ளி, பயங்கரமான டிசிப்ளின், பள்ளியின் உள்கட்டமைப்பு ஆரம்பித்து எல்லா விஷயங்களையும் பெருமையாய் பேசிக்கொண்டிருந்தார். நானும் அவரிடம் என்னமாதிரியான சிலபஸ் என்று கேட்டேன். பெரிய சிலபஸ் சார். ஐ.சி.எஸ்.சி. பாடத்திட்டம்னா பார்த்துக்கோங்களேன் என்று பார்த்த அவர், என்ன யோசிச்சாரோ தெரியவில்லை. ஸ்டேட் போர்டு, அதற்கு மேலே மெட்ரிகுலேஷன், அதற்கு மேலே சி.பி.எஸ்.இ. அதுக்கும் மேல ஐ.சி.எஸ்.சி. அப்போ பார்ததுக்கோங்க. பெரிய சிலபஸ் சார். பெரிய ஆளா வருவா பாருங்க என்றார் வெள்ளந்தியாக.
இவ்ளோ ஆசைப்பட்டு சேர்த்திருக்கீங்க.. சந்தோஷம். பொண்ணு வளர்ந்தபிறகு அவளை என்னவாக ஆக ஆசைப்பட்றீங்கன்னு கேட்டேன். ஐ.ஐ.டி.ல பெரிய தொழில்நுட்ப படிப்பு படிக்க வைக்கணும் என்று முகம் மலர்ந்தார். நண்பரை மாதிரிதான் நம் தேசத்தில் என்று பொதுவாக சொல்லவிட முடியாது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் 90 சதவீத மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். தான் கஷ்டப்பட்டாலும் சரி; குழந்தைகங்களுக்கு சிறப்பான படிப்பை கொடுத்திடணும். சிறந்த வேலைவாய்ப்பை வாங்கி கொடுத்திடணும். இவ்வளவுதான் பெற்றோர்களுக்கு ஆசை. இந்த ஆசையைத்தான் தனியார் பள்ளிகள் அனைத்தும் சிறப்பா பயன்படுத்திக்கொள்கின்றன என்பதைத்தான் கடந்த இதழுக்கு முந்தைய இதழில் பார்த்தோம்.
க்மிழ்நாட்டில் பொது நுழைவுத்தேர்வு என்பது கிடையாது என்ற விவரம் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டேன். ஒரு சில நிமிடங்கள் யோசித்தவர், தெரியும் என்றார். றுபாறியியல் படிப்புக்கு மட்டுமல்ல; மருத்துவப் படிப்புக்கும் பொதுத்தேர்வு கிடையாது. மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பொறியியல், மருத்துவக் கல்லூரியிடங்கள் நிரப்பப்படுகின்றன என்ற தகவல் முழுமையாக தெரியாவிட்டாலும், ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்தார் என்பது வரையில் கொஞ்சம் சந்தோஷம்தான்.
ஆனால், ஐ.ஐ.டி. போன்ற தேசிய கல்விநிலையங்களில் சேருவதற்கு கட்டாயம் நுழைவுத் தேர்வுதான் எழுதியாகவேண்டும். அந்த நுழைவுத்தேர்வு மத்திய அரசின் கல்வி ஆணையம்தான் நடத்துகிற விவரம் உங்களுக்கு தெரியுமா என்று கேட்டேன். தெரியாது என்றார். இதுதான் பிரச்சினையே. இப்போது நண்பர் பிரச்சினையில் எப்பஐ மாட்டியிருக்கிறார் என்பதை மட்டும் சொல்கிறேன் பாருங்கள். வெளிநாட்டில் வேலைவாய்ப்பைத் தேடி லட்சக்கணக்கான இந்தியர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு பயணிக்கிறார்கள். சிலர் குடும்பத்துடன் வெளிநாட்டிலேயே குடியுரிமை பெற்று தங்கிவிடுகிறார்கள். அப்பஐ தங்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் பிள்ளைகளை ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிக்க வைப்பார்கள். காரணம், அந்தப் பாடத்திட்டத்தில் ஆங்கிலத்திற்கு அதிக முன்னுரிமை அளித்திருப்பார்கள். அதுமட்டுமல்லாமல், உலகத்தின் பல நாடுகளில் இந்தப் பாடத்திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவிலும் இருக்கிறது. சில காலம் மட்டும் வெளிநாட்டில் தங்கியிருந்துவிட்டு தாய்நாட்டிற்கு திரும்புபவர்கள் இந்தியாவில் ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தங்கள் குழந்தைகளை சேர்த்துக்கொள்ள முடியும். இதனால், குழந்தைகள் தடுமாறாமல் பாடங்களை படிப்பார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, ஒருவேளை இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இரண்டு ஆண்டுகள் அமெரிக்காவில் பணிபுரிந்துவிட்டு, அதற்கடுத்தாற்போல் அங்கிருந்து வேறொரு நாட்டிற்கு பயணப்படுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த நாட்டிலும் இதே பாடத்திட்டத்தில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியும். சொல்லப்போனால், இந்தப் பாடத்திட்டம் சர்வதேச பாடத்திட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால், இந்தியாவில் தேசிய அளவிலான கல்வி நிலையங்களில் சேர்ப்பதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒவ்வொரு போட்டித் தேர்வும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது. சொல்லப்போனால், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கூட கேள்விகள் கேட்பதில்லை.
இன்னும் சொல்லப்போனால், இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெறும் எந்த ஒரு தகுதித்தேர்வாக இருந்தாலும் சரி; அது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயேதான் அமையப்போகிறது. அது எந்தவகையிலும் ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டமாக மாறுவதற்கு சாத்தியமே இல்லை. இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் வெளிநாட்டிற்கு வேலைநிமித்தமாக குடும்பத்துடன் செல்ல வேண்டியதிருக்கும் என்பவர்களும், இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு வேண்டுமானால், ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டம் கைக்கொடுக்குமே தவிர்த்து, காலம் முழுவதும் இந்தியாவிலேயே வாழ்க்கையைத் தொடரப் போகும் எந்த ஒருவருக்கும் ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டம் கைக்கொடுக்காது என்பதே நிஜம்.
இந்த விவரங்களையெல்லாம் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் சொல்லியிருக்கலாம் அல்லவா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். ஐ.சி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் அடிப்படையில் செயல்படும் பள்ளிகள் பெரு நகரங்களில் ஒரு சில மட்டுமே. பெற்றோர்கள் இம்மாதிரி சந்தேகங்களை பள்ளி நிர்வாகத்திடம் கேட்கும்போது, உங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் போய் வேலை பார்க்கவேண்டாமா? என்று கேள்விக் கேட்டவுடனேயே நம்மவர்கள் ஆனந்தத்தில் துள்ள ஆரம்பித்துவிடுவார்கள். வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக வேண்டுமென்றால், இந்தக் கல்வித் திட்டம்தான் கைக்கொடுக்கும் என்று ஒரே போடாக போட்டுவிடுவார்கள்.
இவ்வளவும் சொல்லிமுடித்தவுடன், நண்பர் கேட்டார் அப்போ.. இப்ப என் குழந்தையை நான் என்ன பண்றது?ன்னு கேட்டார். அடுத்த வருஷம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் உள்ள பள்ளியில் சேர்த்துடுங்க. பள்ளியை ஒரே வருடத்தில் மாற்றுவது என்பது கஷ்டம்தான், ஆனால், குழந்தை பெரியவளாகிய பிறகு பத்தாம் வகுப்பு படிக்கும்போது, பாடத்திட்டத்தை மாற்றி படிக்கும் நிலை ஏற்படும்போது பெரிய அளவில் மாணவி தடுமாறும் வாய்ப்பு இருக்கிறது. உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் கஷ்டப்படாமல் இருக்கவேண்டுமானால், இப்போ கொஞ்சம் கஷ்டப்பட்டா தப்பில்லைன்னேன்.
இந்தக் கட்டுரை நண்பருக்கு மட்டுமல்ல; குழந்தைகள் மீது கண்மூடித்தனமாய் அன்பு வைத்துக்கொண்டு கவுரவம் என்ற பெயரில் யோசிக்காமல் ஒவ்வொரு பெற்றோருக்கும்தான்.
நீங்கள் எடுக்கும் கண்மூடித்தனமான முடிவு, குழந்தைகளின் எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கும் என்பதை மட்டும் எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here