இப்படியும் ஸ்கூல் இருக்குது பாருங்க!

0
123

நம்ம ஊருல பசங்க எப்போ ஸ்கூலுக்குப் போறாங்கன்னு ஏதாவது பெற்றோர்கள்ட்ட கேட்டுப் பாருங்க… அதை ஏன் கேட்குறீங்க… 7 மணிக்கு வேன்ல ஏற்றி விட்றோம். சாப்பாடு எல்லாம் கட்டிக் கொடுத்து விட்டுடுவோம். பிள்ளை சாப்பிட்டானோ, இல்லையோ என்ற பதைப் பதைப்போடு என்றுமே இருப்போம். பிள்ளை அசந்து போய் சாயங்காலம் 5 மணிக்கு வருவான்.

அப்புறம், டியூஷன், ஹோம் ஒர்க்குன்னு போயி பிள்ளை என்கிட்ட பேசுறதுக்கே நைட் 8 மணி ஆயிடும். இப்போதுள்ள பிள்ளைங்கல்லாம் ரொம்ப பாவங்க என்று அங்கலாய்க்கக்கூடிய பெற்றோரா… இப்போ இங்க சொல்லப்போற நியூஸைப் படிச்சுட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க.

ஸ்கூல் ஏழு மணிக்கெல்லாம் ஆரம்பிச்சுடும். சரியா அஞ்சு மணி நேரம் தான் ஸ்கூல். 11.30 அல்லது 12 மணிக்கெல்லாம் ஸ்கூல் விட்டுடுவாங்க. சொல்லிக்கிற மாதிரி பெரிய ஹோம் ஒர்க்கெல்லாம் எப்போதுமே கிடையாது. ஏன்னா, எல்லாமே ஸ்கூல்லேயே முடிச்சுத்தான் அனுப்புவாங்க. ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும் குழந்தைங்க வீட்டுல தங்களோட பெற்றோர்களுடன் சேர்ந்து அமர்ந்து உணவு உண்ண வேண்டும். அவர்களுடன் சகஜமாக பேசி அரட்டையடித்து பேசி மகிழ வேண்டும்.

4.30க்கெல்லாம் விளையாடப் போனாங்கன்னா, 2 மணி நேரம் விளையாடணும். அப்புறம் சீக்கிரம் படுக்கப் போயிட்டாங்கன்னா, இரவு நீண்ட நேரம் இரவில் தூங்க பசங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நேரம் தூங்கியாச்சுன்னா, அதிகாலையிலேயே முழிப்பு வந்திடும். நல்ல தூக்கம் தான் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியம். நல்ல ஆரோக்கியம் தான் நல்லப் படிப்புக்கு வழி வகுக்கும் என்று கொள்கை அடிப்படையில் செயல்படுது இந்தப் பள்ளி.

சூப்பர்… நம்ம ஊர்ல இந்த ஸ்கூல் எங்க இருக்குன்னு மட்டும் கேட்டுடாதீங்க. ஏனெனில் இந்த மாதிரி ஸ்கூல் இருக்கிறது நம்ம நாட்டுல இல்லீங்க. பிரேசில்ல இருக்குது. பிள்ளைங்க அம்மா அப்பாகிட்ட செலவழிக்கிற நேரம்தான் அவர்களை சிறந்த மனிதர்களாக உலகிற்கு அறிமுகப்படுத்தும் என்பதோடு, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம் நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம். அது சரியா கிடைச்சுடுச்சுனா, அப்புறம் கல்வியில அவங்களை அடிச்சுக்கவே முடியாது என்கிறது பிரேசில் கல்வித்துறை.

இந்த நல்ல பழக்கவழக்கத்தி முடிந்தால் நம்ம அரசும் பின்பற்றலாமே!


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here