கமர்ஷியல் பைலட்

0
44
6100-08857008 © Masterfile Royalty-Free Model Release: Yes Property Release: Yes Caucasian pilot and flight attendant smiling on runway

என்ஜினீயர், மருத்துவர் படிப்புக்கு அடுத்தப்படியாக மாணவர்கள் அனைவரும் விரும்பி படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது எப்படியாவது பைலட் ஆகிவிட வேண்டும் என்பதுதான். ஆசைதான் லட்சியத்தை அடையத் தூண்டும் மந்திரச்சாவி. ஆனால், ஆசையோடு கடின உழைப்பும் இருந்தால், கண்டிப்பாக விமானியாகிவிடலாம்.
விமானத்துயையை பொறுத்தவரை என்னமாதிரியான வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏர் ஹோஸ்டர்ஸ், ஏர் டிராபிக் கண்ட்ரோலர், கமர்சியல் பைலட், ஹெலிகாப்டர் பைலட் போன்ற முக்கியமான பணிகளுக்குச் செல்லலாம். இந்த ஒவ்வொருப் பணிக்கும் செல்ல நாம் எப்பஐ படிக்க வேண்டும் என்றுதானே யோசிக்கிறீர்கள்…
கமர்சியல் பைலட்: பயணிகளை ஏற்றிச்செல்லும் விமானத்தை இயக்குபவர்தான் கமர்சியல் பைலட் என்று அழைக்கப்படுவார்கள். விமானத்தில் பயணிக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் உயிரைக்காக்கும் பணி என்பதால், மிகவும் சவாலான பணி இந்த கமர்சியல் பைலட் பணி. இந்தப் பணிக்குச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள், சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சமயோஜித புத்தி நிறைந்தவராக இருக்க வேண்டும். பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, எந்தப் பிரச்சினையையும் மிகவும் எளிதாக கையாளும் தன்மை கொண்டவர்களாக இருத்தல் அவசியம்.
கமர்சியல் பைலட் படிப்பு மற்றும் பயிற்சியை டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன் (ஈடிணூஞுஞிtணிணூச்tஞு எஞுணஞுணூச்டூ ணிஞூ இடிதிடிடூ அதிடிச்tடிணிண) கட்டுப்பாட்டின் கீழ் பல்வேறு கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் உத்திரபிரதேச மாநிலம், ரேபரேலி பகுதியில் இந்திராகாந்தி ராஷ்ட்ரிய அகாடமி நாட்டிலேயே விமானப் பயிற்சியில் சிறந்து விளங்கும் கல்விநிலையங்களில் முக்கியமானது ஆகும்.
கமர்சியல் பைலட்டாக என்ன படிக்க வேண்டும்?
கமர்சியல் பைலட் பயிற்சியில் சேர பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 16 வயது நிரம்பிய மாணவர்களுக்கு மாணவர்களுக்கான விமானி உரிமமும், 17 வயது நிரம்பிய மாணவர்களுக்கு கமர்ஷியல் விமானி உரிமமும் வழங்கப்படுகிறது. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். நல்ல கண்பார்வை இருத்தல் அவசியம்.
கமர்ஷியல் பைலட்டாவதற்கான நடைமுறைகள் என்னென்ன?
கமர்ஷியல் பைலட் பணிக்குச் செல்ல மூன்று கட்டங்களாக மாணவர்கள் தயாராக வேண்டும். அதல் முதல்கட்டமாக கமர்ஷியல் பைலட் ஆவதற்கு மாணவர் விமானி உரிமம் (ஸ்டூடண்ட் பைலட் லைசன்ஸ்) பெற்றாக வேண்டும். இந்த உரிமம் பெற்ற நபர்கள், மத்திய அரசின் கட்டுப்படின் கீழ் செயல்படும் டிஜிசிஏ (டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன்) அங்கீகரித்த ஏதேனும் விமானச் சங்கத்தில் (பிளையிங் கிளப்) உறுப்பினராக வேண்டும். பிளையிங் கிளப்பில் உறுப்பினராக சேருவதற்கு மாவணர்கள் உடற்தகுதி சான்றிதழ் மற்றும் செக்யூரிட்டி கிளியரன்ஸ் மற்றும் பேங்க் காரண்ட்டி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இவையெல்லாம் சரிபார்க்கப்பட்டதற்குப் பின் எழுத்துத் தேர்வு அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் ஏர் ரெகுலேஷன்ஸ், ஏவியேஷன் மெட்டராலஜி, ஏர் நேவிகேஷன், விமான என்ஜின் குறித்த கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில் வெற்றிபெறும் மாணவருக்கு மாவர் விமானி உரிமம் அளிக்கப்படுகிறது.
இரண்டாம் கட்டமாக தனியார் விமானி உரிமம் (பிரைவேட் பைலட் லைசென்ஸ்) பெற வேண்டும். பிரைவேட் பைலட் லைசென்ஸ் பெறுவதற்கு அதற்கான பயிற்சியில் நாம் தேர்ச்சிப் பெற வேண்டும். தனியார் விமானி உரிமப் பயிற்சியில் மாணவர்களுக்கு 60 மணி நேர தனியாக, இரண்டு விமானிகளில் ஒருவராக இப்பஐ பல கட்டங்களாக விமானியாக பயிற்சிஎடுக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் நம்முடைய செயல்பாடு, பயிற்சியில் காட்டும் ஆர்வம், மற்றும் சுறுசுறுப்பை வைத்து எழுத்துத் தேர்வுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப்பெறும் மாணவர்கள், ஆர்ம்டு போர்சஸ் சென்ட்ரல் மெடிக்கல் எஸ்ட்டேபிளிஸ் மெண்ட் (அஊஇMஉ) அளிக்கும் உடற்தகுதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இவை அனைத்திலும் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு, தனியார் விமானி உரிமம் அளிக்கப்படும்.
கமர்ஷியல் பைலட்டாக வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள் கண்டிப்பாக, பிரைவேட் பைலட் லைசென்ஸ் பெற்றாக வேண்டும். மொத்தம் 250 மணி நேரம் கமர்ஷியல் பைலட் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் விமானியாவதற்கான எல்லாப் பயிற்சியும் அளிக்கப்பட்டு, முழுமையான விமானியாக மாணவர்கள் செதுக்கப்படுகிறார்கள். இந்தப் பயிற்சி முடிவுற்றதும் மாணவர்களுக்கு தில்லியில் உடற் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். இதில் தேர்ச்சிப்பெறும் மாணவர்கள், எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஏர் ரெகுலேஷன்ஸ், ஏவியேஷன் மெட்டராலஜி, ஏர் நேவிகேஷன், டெக்னிக்கல், பிளானிங், ரேடியோ அண்ட் வயர்லஸ் டிரான்ஸ்மிஷன் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். கமர்ஷியல் இதில் தேர்ச்சிப் பெறும் மாணவர்கள், தனியாருக்குச் சொந்தமான அல்லது அரசுக்குச் சொந்தமான விமானங்கள் மற்றும் பாதுகாப்புப் படைக்கான விமானங்கள், ஹெலிகாப்டரில் விமானி பணிக்குச் செல்லலாம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here