மண்புழு உரம் தயாரிக்க இலவசப் பயிற்சி

0
179

உழைக்க நான் தயாராக இருக்கிறேன்.  ஆனால் என்ன மாதிரியான தொழில் ஆரம்பிப்பது என்பது குறித்த எந்தவொரு விஷயமும் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.  உங்களின் எண்ணங்களுக்கு மருந்தாக, உங்கள் ஊக்கத்திற்கு உரமேற்ற, சில பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பை இங்கு தொகுத்துள்ளோம்.

இங்கு தொகுக்கப்பட்டவைகளில்  சில ஏற்கெனவே பயிற்சி வகுப்பு முடிந்துவிட்டன.  இருந்தபோதிலும், அடுத்த பயிற்சி வகுப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்தும் இந்தப் பயிற்சி குறித்த கூடுதல் அறிவையும் நீங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மண்புழு உரம் உற்பத்தி செய்யும் முறை குறித்த ஒரு நாள் இலவசப் பயிற்சி அவ்வபோது நடந்துவருகிறது.

நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.

மண்புழு உரம் தயாரிக்கும் இடம் தேர்வு, மண்புழுவைத் தேர்வு செய்தல், தொட்டி மற்றும் குவியல் முறையில் மண்புழு உரம் தயாரித்தல், பயிர்க் கழிவுகள், நகரக் கழிவுகள் மற்றும் கோழிக் கழிவுகளில் இருந்து மண்புழு உரம் தயாரித்தல், ஒவ்வொரு வேளாண் பயிர்களுக்கும் மண்புழு உரப் பரிந்துரை அளவு, மண்புழு உரத்தின் நன்மைகள், மண்புழு ஊட்ட நீர் தயார் செய்யும் முறை, அதனைப் பயிர்களுக்குத் தெளிக்கும் அளவு முறை குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியில் சேர விருப்பமுள்ள விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் நேரில் வந்தோ அல்லது 04286266345, 04286266244, 04286266650 எதிர் வரும் பயிற்சி வகுப்புக்கு இப்போதே முன்பதிவு குறித்த விவரங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here