கூகுள் வழங்கும் ரூ.1 லட்சத்துடன் ஆன்லைன் படிப்பு!

0
103

 

ஆணுக்கு நிகராக பெண்களும் தொழில் நுட்பத்தில், சாஃப்ட்வேர் துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காக உலகின் மிக புகழ்பெற்ற தேடுபொறியான கூகுள் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 600 பெண் சாஃப்ட்வேர் பொறியாளர்களை உருவாக்க திட்டமிட்டிருக்கிறது.  அதற்கான அறிவிய்ப்பை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.

கூகுள் வழங்கும் இந்த சாஃப்ட்வேர் பொறியியல் படிப்பிற்கு பட்டதாரி மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.  இது ஒரு ஆன்லைன் படிப்பாகும்.  கூகுள் மூலமாக இந்த ஆன்லைன் படிப்பில் சேரும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்படவிருக்கிறது.

இந்த ஓராண்டு சாஃப்ட்வேர் பொறியியல் படிப்பை மாணவிகளுக்கு வழங்குவதற்காக கூகுள் நிறுவனம் புகழ்பெற்ற ஆன்லைன் கல்வி நிறுவனமான டேலண்ட் ஸ்பிரிண்ட் நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளது.

கூகுள் நடத்தும் இந்த ஓராண்டு படிப்பில் சேர்வதற்கான கல்வித்தகுதி என்ன?

2020 அல்லது 2021ஆம் ஆண்டில் B.E., B.Tech, M.Sc., MCA படிப்புகளை முடிப்பவராக இருக்க வேண்டும்.

மாணவிகள் பட்டப் படிப்பில் IT, CSE, ECE, EEE, Maths, Applied Maths போன்ற துறைகளையோ இவற்றுக்கு நிகரான துறைகளையோ தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 70% மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

 

தேர்வு முறை

ஆன்லைன் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கூகுள் ஹேங்அவுட் (Hangout) மூலம் நேர்முகத் தேர்வு நடைபெறும். அதன் அடிப்படையில் தகுதியான 100 மாணவிகள் தேர்வுசெய்யப்படுவர்.

 

இந்தப் பயிற்சியில் சேருவதால் கிடைக்கும் பலன்!

 

இந்த ஓராண்டு பிடிப்பு கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவிகளுக்கு மட்டுமே. இப்படிப்பில் கூகுள் நிறுவனத்தில் மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதலையும் ஆலோசனைகளையும் பெற முடியும். கூடவே கூகுள் நிறுவனத்தில் வேலையைப் பெறும் வாய்ப்பும் கிடைக்குலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க பட்டதாரி மாணவிகளான நீங்க தயாரா இருந்தா இப்பவே விண்ணப்பிச்சிடுங்க.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – மே 10, 2019

ஆன்லைன் தேர்வு நடத்தும் நாட்கள் – ஏப்ரல் 20 முதல் மே 15, 2019

நேர்முகத் தேர்வு நடத்தும் நாட்கள் – மே 1 முதல் 18, 2019

தேர்வானதும் படிப்பில சேர்வதற்கான அவகாசம் – மே 20 முதல் 27, 2019

மேலும் விவரங்களுக்கு : https://talentsprintwe.com/?_ga=2.223487963.196371325.1555999434-1748221344.1555999434

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://talentsprintwe.com/application.html?_ga=2.223487963.196371325.1555999434-1748221344.1555999434


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here