மூளையின் திறனை அதிகப்படுத்துவோம்!

0
98

மூளையின் திறனை அதிகரிக்கும்போது, உடலும் மனமும் சேர்ந்து சுறுசுறுப்பாகும், எப்போதும் உற்சாகமாக இருப்போம். நினைவுத்திறன் அதிகரிக்கும்.
தேர்வை எதிர்கொள்ளும் ஒவ்வொரு மாணவரின் மனக்குறையும், படித்ததெல்லாம் அப்படியே நினைவில் நிற்கவேண்டும் என்பதுதான். ஆனால், படித்தது ஏனோ மறந்துவிடுகிறது. இதற்கு என்ன செய்ய என்பதுதான் மாணவர்கள், பெற்றோர்களின் மில்லியன் டாலர் கேள்வி.
தன் குழந்தைகளின் மூளைத் திறனை அதிகப்படுத்துவதற்காக பெற்றோர்கள் அறிவைப் பயன்படுத்தி செய்யும் விளையாட்டுகள் குறிப்பாக சுடோகு, குறுக்கெழுத்துப் போட்டிகள், வீடியோ கேம்ஸ் போன்றவற்றை விளையாட குழந்தைகளை ஆர்வப்படுத்துவார்கள்.
ஆனால், உண்மையிலேயே சுடோகு விளையாட்டும், குறுக்கெழுத்துப் போட்டி விளையாட்டுகளும் மூளையின் திறனை அதிகப்படுத்துவதில்லை என்கிறது ஆராய்ச்சி.
அய்யய்யோ… அப்படீன்னா என்ன பண்றதுங்கறதுதான் உங்களின் கேள்வியாய் இருக்கும்.
மூளையைப் பயிற்றுவிக்கும் விளையாட்டுகள், மூளையின் நலத்திற்குப் பலனளிக்கும் என்று கருதப்படும் அளவைவிட குறைவான பலன்களையே அளிக்கிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ” மூளை விளையாட்டுகளை மனிதர்கள் விளையாடினால், அந்த விளையாட்டில் வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்கள் முன்னேறலாம். ஆனால் அந்த விளையாட்டில் உண்டாகும் முன்னேற்றத்தால் அவர்களின் தினசரி அறிவுசார் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கான முடிவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை, ” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இளம் வயதிலேயே மூளையைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுவோரின் மூளையானது, வயதானபிறகுகூட நன்றாக செயல்படும் என்கிறது அந்த ஆய்வறிக்கை.
எவ்வளவு இளம் வயதில் மூளைத் திறன்களை அதிகப்படுத்தும் செயல்களில் ஒரு நபர் ஈடுபடத் தொடங்குகிறாரோ, அந்த அளவுக்கு முதுமையில் அவர்களின் மூளை நன்றாக செயல்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மூளைத் திறனை அதிகரிக்க என்னவெல்லாம் செய்யலாம்?
பொம்மைகள் செய்து பயிற்சி செய்யலாம்.
புகைப்பட பயிற்சி
சமையல் செய்வது
தோட்டக் கலை
புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது
படைப்புத்திறனுடன் எழுதுவது
கலைத் திட்டங்களில் ஈடுபதுவது
தன்னார்வலர் ஆவது உள்ளிட்ட விஷயங்கள்தான் மூளைத் திறனை அதிகரிக்கும்.
மூளைத் திறனை அதிகரித்து, நீங்கள் படித்த பாடங்கள் அனைத்தும் ஆழமாய் பதிந்து எப்போதுமே நினைவில் வைத்துக்கொள்ள மேற்கண்ட செயல்களைப்போல பல செயல்களை இன்றே நாம் செய்ய தொடங்கலாம்.
உங்கள் முதுமை காலத்தில் உங்கள் மூளை செயல்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால், அதற்கான செயலில் ஈடுபட ஆரம்பியுங்கள். உங்களின் திறன் உங்கள் கையில்தான்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here