அடேங்கப்பா பள்ளி!

0
102

லக்னோவில் உள்ள மாண்டீசோரி பள்ளிதான் நம்மை இப்படி அடேங்கப்பா போட வைத்துள்ளது.

அபடியென்ன ஸ்பெஷல்னுதானே கேட்குறீங்க… நம்ம ஊர்ல ஸ்கூல்ல எவ்ளோ ஸ்டூடண்ட் படிப்பாங்கன்னு கேட்டா நீங்க என்ன சொல்வீங்க… குறைஞ்ச பட்சம் 500லிருந்து அதிகபட்சம் 5000 வரைக்கும் இருக்கும்னு சொல்வீங்க…

அதுவே பத்தாயிரம் மாணவர்கள் ஒரே பள்ளியில் படித்தால் உங்களுக்கு எப்படியிருக்கும்? நிச்சயம் ஆச்சர்யப்பட்டு போவீர்கள் தானே…

அதுவே ஒரே பள்ளி வளாகத்தில் 44 ஆயிரம் மாணவர்கள் படித்தால்…

அடேங்கப்பா… கின்னஸ்ல தான் இந்தச் செய்தியை போடணும்னு நினைப்பீங்க தானே… உங்க நினைப்பு ரொம்ப ரொம்ப கரெக்ட்.  44 ஆயிரம் எண்ணிக்கையுள்ள இந்தப் பள்ளி தற்போது கிண்ணஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.  அதாவது உலக அளவில் அதிகபட்ச மாணவர்களைக் கொண்ட ஒரே பள்ளி என்ற தலைப்பில் இந்தியாவின் லக்னோவில் செயல்படும் இந்தப் பள்ளி இடம்பிடித்துள்ளது.

அதுசரி… 44,000 மாணவர்கள் இருந்தா, அந்த ஸ்கூல்ல எவ்ளோ டீச்சர்ஸ் இருப்பாங்கன்னுதானே கேட்குறீங்க… மொத்தம் 2500 ஆசிரியர்கள் அந்தப் பள்ளியில் பணியாற்றுகிறார்கள் என்பதுதான் ஆச்சர்யமிக்க செய்தி.

இந்தப் பள்ளியில் மாணவர்கள் படிப்பதற்காக மொத்தம் 1000 வகுப்பறைகள் இருக்கிறதாம்.  இன்னொரு கூடுதல் விஷயம் என்னவென்றால், இந்தப் பள்ளியில் படிக்கும் 44 ஆயிரம் மாணவர்கள் அணிந்திருக்கும் சீருடையில், ஒவ்வொன்றிலும் சிறப்பு அடையாளம் ஒன்று இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

300 ரூபாயில் ஆரம்பிக்கப்பட்டது:

இந்தப் பள்ளி 1959 ஆம் ஆணு பாரதி மற்றும் ஜெகதீஷ் என்ற இருவர் 300 ரூபாய் கடன் வாங்கி இந்தப் பள்ளியை ஆரம்பித்தார்கள்.  இந்தப்  பள்ளி ஆரம்பிக்கும்போது, இந்தப் பள்ளியில் சேர்ந்தது மொத்தம் ஐந்தே மாணவர்கள் தான். கடந்த 50 ஆண்டுகளில் இத்தனை ஆயிரம் மாணவர்கள் இந்தப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள் என்றால் நிச்சயம் அது ஆச்சர்யத்தக்க விஷயம் தானே.

ஒவ்வொரு வகுப்பறையிலும் 45 மாணவர்கள் அமர முடியும்.  இந்தப் பள்ளியில் 3 வயதிலிருந்து 17 வயது வரை உள்ள மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்.

2005 ஆம் ஆண்டில் இந்தப் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 29,212.  அதுவரை உலகத்தில் அதிக மாணவர்கள் படிக்கும் ஒரே பள்ளி என்ற பெருமையைப் பெற்று வந்த பிலிப்பைன்ஸ் பள்ளியின் பெருமையை (20,000 மாணவர்கள் படித்தார்கள்) முதல் முறையாக 2005 ஆம் ஆண்டு இந்தப் பள்ளி தட்டிச் சென்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here