கவுன்சலிங் ஸ்பெஷல் 4 : படிப்புகளை தேர்வு செய்வது எப்படி?

0
383

பெரிய ஹோட்டலில் போய் உட்கார்ந்திருக்கிறோம் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் முன்னால், ஹோட்டல் ஊழியர் ஒருவர் உங்களிடம் அந்த ஹோட்டலில் உள்ள எல்லா உணவுகளையும் விறுவிறுவென்று சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் சொல்வதில் பாதி உணவுகள் கேள்விபட்டது மாதிரி இருக்கிறது. ஆனால் புதுமையாக இருக்கிறது. சில உணவுகள் பழக்கப்பட்ட உணவுகள் தான். இப்போது உங்கள் தேர்வு என்னவாக இருக்கும்.

புதுமையாகவும், அதே நேரத்தில் இதுவரை சுவைத்திராத சாப்பாட்டையும் சாப்பிடலாமே என்று எண்ணத் தோன்றும்.

ஆனால், சாப்பிட்டிராத புதிய உணவை முதல் முறையாக சுவைக்கும் போது, சாப்பிட்டு முடித்த பிறபாடு அது அசெளகரியத்தை ஏற்படுத்தலாம். அல்லது வயிறு சார்ந்த உபாதைகளை ஏற்படுத்தலாம். சாப்பிட்டு முடித்தவுடன் தான் இணையதளத்தில் நீங்கள் சாப்பிட்ட சாப்பாட்டில் அதிகபட்ச கொழுப்பு இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டால், இன்னும் கூடுதலாக மன உளைச்சல் ஏற்படும்.

இப்போது உங்களுக்கு மன உளைச்சல், சாப்பிட்டிற்கு செலவு செய்த செலவு எல்லாமே வீண் என்று தோன்றும். சிலர் ஓட்டலுக்கு சாப்பிட வருவார்கள். வந்து அமர்ந்தவுடன் அவர்கள் வேண்டாம் என்று சொல்வது மெணு கார்டைதான். ஏனெனில் வீட்டிலிருந்தே வரும்போதே இதைத்தான் சாப்பிட வேண்டும். இந்த சாப்பாட்டை சாப்பிடும்போது, உடலுக்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது என்று தெரிந்தே வந்திருப்பார்கள் எனும்போது வந்தவுடன், அவர்கள் எதிர்பார்த்து வந்த சாப்பாட்டை வேண்டி கேட்பார்கள். சாப்பிடுவார்கள் கிளம்புவார்கள்.

இதே மனோ நிலை தான் நீங்கள் கவுன்சலிங் செல்லும்போது இருக்க வேண்டும். ஏனெனில் தினம் தினம் புதுப்புது பொறியியல் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. எல்லா படிப்புகளும் சிறந்த படிப்புகள் தான். தேவையில்லாத படிப்புகள் என்று எதுவும் கிடையாது. இருந்தாலும், ஒரு படிப்பின் பயன்கள், அதனுடைய தேவைகள், எதிர்காலத்தில் சம்பந்தப்பட்டப் படிப்பு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருமா இல்லையா என்பதையெல்லாம் முழுமையாக கவுன்சலிங் செல்வதற்கு முன்பே ஆய்வு செய்து இறுதி செய்திருக்க வேண்டியது கட்டாயம்.

ஏனெனில் கவுன்சலிங் செல்லும் வளாகத்தில் உங்களது நண்பர்களை சந்திக்கலாம், உங்கள் குடும்ப நண்பரை சந்திக்கலாம். அவர்கள் உங்களின் எண்ணத்தை திசை திருப்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், எந்தப் படிப்பை எந்தப் பிரிவை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து குறைந்த பட்சம் 20 நாட்களாவது ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்விற்கு நீங்கள் உங்கள் பள்ளி ஆசிரியர், கல்லூரி ஆசிரியர்கள், கூகுள், செய்தித்தாள்கள், பொறியியல் படிப்பை முடித்து தற்போது பணியில் இருக்கும் மூத்த நண்பர்களிடம் கேட்டு விவரங்களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான கருத்துக்கள் எந்தப் படிப்பிற்கு ஆதரவாக இருக்கிறதோ, அந்தப் படிப்பை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துங்கள். அப்போதுதான், உங்கள் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.

படிப்புகளை தேர்வு செய்வதில் இன்னொரு வழி நாளை சொல்கிறேன்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here