வெளிநாட்டில் எம்.பி.ஏ. படிக்க உதவித்தொகை

0
80

பட்டப் படிப்பு முடித்துவிட்டு மேலாண்மைப் படிப்பில் முதுநிலைப் பட்டப் படிப்பு, வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு படிப்புக்காலத்தில் ஏற்படும் செலவுகளை முழுவதும் அளிக்கிறது இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான ரிலையன்ஸ். இந்த உதவித்தொகையின் கீழ் 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பட்டப் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், இந்தியாவை சர்வதேச அளவில் தொழில்வளர்ச்சியில் முன்னேற்ற நினைக்கும் இளைஞர்கள், உயர்படிப்புக்கு நிதி உதவி தேவைப்படுபவர்களுக்கு இந்த உதவித்தொகையை அளித்துவருகிறது ரிலையன்ஸ் நிறுவனம்.
இந்த உதவித்தொகையின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், கனடாவில் உள்ள ஸ்டேன்ஃபோர்டு மேலாண்மைப் பள்ளியில் படிப்பதற்கான முழு படிப்புச் செலவு மற்றும் சென்று வரும் செலவு, தங்குவதற்கான செலவு முழுவதையும் ரிலையன்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். ஆனால், முதுநிலைப் படிப்பு முடிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக இரண்டு ஆண்டுகள் இந்தியாவில் பணிபுரிய வேண்டும். கண்டிப்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தில்தான் பணிபுரிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here